Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் ஜூஸ் கடையை நொறுக்கிய கஞ்சா குடிக்கிகள்..!
தலைக்கேறிய கஞ்சா போதையில் ஜூஸ் கடையை அடித்து நொறுக்கிய 4 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்துள்ள சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகரில் ஜூஸ் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 3 ஆம் தேதி வந்த 4 இளைஞர்கள், மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கல்லாபெட்டியின் அருகே இருந்த பாட்டில்களை அடித்து சேதப்படுத்தி இருக்கின்றனர்.
பின்னர் பொதுமக்கள் திறந்ததும், குத்திவிடுவேன் என அலப்பறை செய்தவாறு தப்பி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரும்பாக்கம் காவல் துறையினர், கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், மேடவாக்கம் பகுதியை சார்ந்த மணி என்ற சூரை மணிகண்டன் (வயது 19), சுரேஷ் என்ற ஜிலேபி சுரேஷ் (வயது 40), சரண் ராஜ் (வயது 21), சலீம் (வயது 34) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களில் சுரேஷ் என்ற ஜிலேபி சுரேஷின் மீது கொலை, கொலை முயற்சி என 35 வழக்குகளும், சூரை மணிகண்டன் மீது 3 கொலை, 14 பிற குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.