ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
#JustIN: "எமர்ஜன்சியா இது? ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" - தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!
2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், 06 ஜனவரி 2025 இன்று, ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை தொடக்கத்தின்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்குப்பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை எனக்கூறி ஆளுநர் ஆர்.என் ரவி, சட்டப்பேரவைக்கு வந்த வேகத்தில் புறப்பட்டுச் சென்றார். மேலும், தமிழ்நாடு அரசு தேசிய கீதத்தை அவமதித்ததாகவும் கருத்துக்களை தனது வலைப்பக்கம் வாயிலாக முன்வைத்தார்.
இந்த விசயத்திற்கு திமுக அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு, பதிலும் அளிக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க ஸ்டாலினும், ஆளுநரின் செயல்பாடுகள் கண்டித்தக்க வகையில், வரம்பை மீறி இருப்பதாகவும் கூறி இருந்தார். சபாநாயகர் அப்பாவு கூறுகையில், மரபுப்படி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி முடியும்போது தேசியகீதம் இசைக்கப்படும். ஆளுநர் பேசத் தொடங்கியதும் கைகளில் பதாகையை வைத்துக்கொண்டு அதிமுக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு கோஷமிட்டனர். ஆளுநர் வரம்பை மீறி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking: சிறுபிள்ளைத்தனமாக ஆளுநர்; தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் கடும் தாக்கு.!
ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம்
இந்நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், "இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
இதையும் படிங்க: #Breaking: "ஆளுநர் ரவியே வெளியேறு" - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேச்சு.!