மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சென்னையில் பயங்கரம்.. ஒருதலைக்காதல் விவகாரத்தில் சிறுமிக்கு கத்திக்குத்து.. இளைஞர் வெறிச்செயல்..!
No Means No என சமூக வலைத்தளங்களில் பாடம் எடுக்கும் பெரும்பாலானோர், அதனை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என செயல்படுவதில்லை என்பதன் ஆகச்சிறந்த உதாரணமாக அவ்வப்போது பல பெண் உயிர்கள் கேள்விக்குறியாக்கப்படும்போது உறுதி செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, வண்டலூரில் உள்ள தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் முதல் ஆண்டு பயின்று வருகிறார்.
சிறுமியை அப்பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பலமுறை சிறுமியிடம் வசந்த் காதலை வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
இந்த காதலில் விருப்பம் இல்லாத சிறுமி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று சிறுமியை சந்தித்த வசந்த் மீண்டும் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதனை அவர் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த கொடூரன் சிறுமியை ஆட்கள் இல்லாத பகுதிக்கு இழுத்துச்சென்று கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.
சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வசந்துக்கு வலைவீசப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு செல்வதற்காக சிறுமி மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது சோகம் நடந்துள்ளது. சென்னை நகரின் முக்கியமான சந்திப்பு பகுதிகளில் ஒன்றான மேடவாக்கத்தில் இச்செயல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.