மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 மாவட்டங்களில் காலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று பல இடங்களில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், ஜனவரி 9-ஆம் தேதியான இன்றைய நாளின் தொடக்கமே காலை 10 மணி வரையில் மழைக்கான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழைக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்பதால் பள்ளிகளுக்கும் விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.