டியூசன்ல படிக்கிற பாடமா இது? 22 வயது இளம்பெண்ணுடன்., 15 வயது சிறுவன்.. போக்ஸோவில் பெண் கைது.!
டியூசனுக்கு படிக்க வந்த 15 வயது மாணவரை இழுத்து ஓடிய 22 வயது இளம்பெண் போக்ஸோவில் கைதானார்.
சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் 10 ம் வகுப்பு பயின்று வரும் 15 வயதுடைய சிறுவன் வசித்து வருகிறார். சிறுவன் டியூசன் சென்று வந்ததாக தெரியவருகிறது.
இதனிடையே, சிறுவன் திடீரென மாயமான நிலையில், அவரை காணாது பரிதவித்த பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: பவானியின் பவ்விய காதலில் சிக்கி, ஏமாற்றத்தால் இளைஞர் விபரீதம்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து சோகம்.!
சிறுவன் மீட்பு
இந்த புகாரின் பேரில் சிறுவன் பேசி வந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்து, சிறுவனின் இருப்பிடத்தை அறிந்தனர். சிறுவன் பாண்டிச்சேரி சென்றது அம்பலமாக, அதிகாரிகள் அங்கு சென்று சிறுவனை மீட்டனர்.
காதல் விவகாரம்
அப்போது சிறுவனுடன் 22 வயது இளம்பெண்ணும் இருந்த நிலையில், விசாரணையில் அவர் சிறுவனின் காதலி என தன்னை அறிமுகம் செய்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அதிகாரிகள், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 22 வயது இளம்பெண்ணை கைது செய்தனர்.
சட்டப்படி நடவடிக்கை
விசாரணையில், இளம்பெண் தனது அக்காவின் டியூஷனில் படிக்க வந்த 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி பாண்டிச்சேரி அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இளம்பெண், இவர்களுக்கு உதவியாக இருந்த மற்றொரு மாணவர் ஆகியோர் இவ்விவகாரத்தில் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தேனியில் பரபரப்பு.. 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! கூலி தொழிலாளிக்கு 4 வருடம் ஜெயில்.!!