மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே கவனம்.. பள்ளிக்கு சென்ற 14 வயது சிறுமி ஆட்டோவில் கடத்த முயற்சி.. எகிறிக்குதித்து தப்பித்த பரபரப்பு சம்பவம்.!
பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்த சிறுமியை கடத்த முயற்சித்த கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதாரித்த சிறுமி நொடிப்பொழுதில் தப்பி குதித்து காயத்துடன் தப்பிய சம்பவம் தொடர்பாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள புதுவண்ணாரபேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவில் வசித்து வரும் 14 வயது சிறுமி, தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்
இந்நிலையில், நேற்று காலையில் சிறுமி வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டு சென்ற நிலையில், ஆட்டோவில் இருந்த 2 பேர் சிறுமியின் முகத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்த முயற்சி செய்துள்ளனர். இதனால் சுதாரித்துக்கொண்ட சிறுமி அலறி கூச்சலிட்டுள்ளார்.
இதனால் சிறுமியின் வாயை பொத்தி கடத்தல் முயற்சி நடக்க, சிறுமி எப்படியோ கயவனின் பிடியில் இருந்து ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் விரைந்து வரவே, கயவர்கள் தப்பி சென்றுள்ளனர். கை-கால்களில் காயத்துடன் இருந்த சிறுமியை மக்கள் அருகேயிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவே, விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்த சார்லஸ் (வயது 49) என்பவரை கைது செய்தனர். ஆட்டோவில் இருந்த 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.