மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைனில் மசாஜ் சென்டர் தேடுபவரா நீங்கள்?.. ஷாக் கொடுத்த கும்பல்; ஆசையாக வரவழைத்து ஆப்படித்த பரிதாபம்.!
கிரெடிட் கார்டு, பணம், கையில் அணிந்திருந்த மோதிரம் என செல்வந்தர் போல மசாஜ் சென்டருக்கு ஆவலாக சென்ற சாப்ட்வேர் எஞ்சினியரின் சல்லாபத்தை பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது செல்போனில் மசாஜ் சென்டர் குறித்து தேடி இருக்கிறார்.
அப்போது, அவரை அழைத்த மர்ம நபர்கள், குமரப்பா தெருவில் மசாஜ் சென்டர் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. உடனடியாக விரைந்து வந்தால் தேவையான விஷயங்களை ஆபரில் செய்து கொடுக்கிறோம் எனவும் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனை நம்பிய கார்த்திக்கும் ஆவலோடு கும்பல் சொன்ன இடத்திற்கு புறப்பட்டு செல்ல, அங்கு அவரின் கை-கால்களை கட்டிப்போட்டு நகை, ரூ.4 ஆயிரம் பணம், கிரெடிட் கார்டு ஆகியவை பறிக்கப்பட்டது. கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1 இலட்சம் பணமும் எடுக்கப்பட்டுள்ளது.
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கார்த்திக்கை மீட்டனர். அவரது புகாரின் பேரில் மர்ம கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.