மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 மாத கர்ப்பத்துடன் தவிக்கும் 22 வயது இளம்பெண்.. வழக்கறிஞர் புடைசூழ கெத்தாக வெளியேவந்த காதலன்.. கண்ணீரில் தவிக்கும் காதலி.!
6 ஆண்டுகளாக பெண்ணை காதலிப்பதாக நடித்து உல்லாசம் அனுபவித்த இளைஞன், காதலியை கைவிட்டு மற்றொரு திருமணம் செய்துகொண்டுதான். திருமணத்திற்கு பின் காதலிக்கு தொடர்பு கொண்டு வெறுப்பேற்றிய இளைஞன், காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களின் ராஜ மரியாதையை புடைசூழ அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியை சேர்ந்த பெண், அயனாவரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், "எனது 22 வயது மகள் செப். மாதத்தில் உடல் சோர்வுடன் இருந்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்று நடத்திய சோதனையில் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது. அவரிடம் கர்ப்பம் குறித்து விசாரிக்கையில், பெரவள்ளூர் சதீஷ் (வயது 24) என்ற இளைஞர் குறித்த தகவல் கிடைத்தது.
அவர் கடந்த பல ஆண்டுகளாக எங்களின் வீட்டருகே வசித்து வந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக எனது மகளும் - சதீஷும் காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் நெருங்கிபழகிய காரணத்தால் மகள் 6 மாத கர்ப்பமாகியுள்ளார். இளைஞர் சதீஷிடம் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கையில், அவர் திடீரென வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
காதலனின் திருமணத்தை அறிந்து காதலி தாயுடன் பெரவள்ளூரில் உள்ள காதலனின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது, அவர் உன்னை யார் என்றே எனக்கு தெரியாது என பேசி துரத்தி இருக்கிறார். மன உளைச்சலுக்கு உள்ளாகிய இளம்பெண் ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்.
அயனாவரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தபோது,, அவர்கள் வழக்கை விசாரணை செய்யாமலேயே பெரவள்ளூருக்கு மாற்றம் செய்துள்ளனர். திருமணம் செய்தபின்னர் காதலியை வெறுப்பேற்ற சதீஷ் காதலிக்கு தொடர்பு கொண்டு எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என்னால் ஒன்றும் செய்ய இயலாது என கர்ப்பிணி பெண்ணை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உதவி ஆணையர் ஜவஹர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. அங்கு சதீஷ் பெண்ணை காதலித்து ஏமாற்றியது உறுதியாகவே, சதீஷுக்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டது. ஆனால், சதீஷின் தரப்பு வழக்கறிஞர்கள் அங்கு குவிந்து அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.