மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. குடிபோதையில் வாகனம் ஓட்டுபர்களுடன் பயணித்தாலும் அபராதம்..!
சமீப காலமாகவே குடிபோதையால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகமாகிகொண்டே இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டாலும், போதை ஆசாமிகளால் ஏற்படும் வாகனவிபத்து தவிர்க்க முடியாத நிலையில் தான் இருக்கிறது.
மேலும் சிலர் பைக்ரைடு செல்வது, குடிபோதையில் வாகனங்கள் மீது மோதுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதில் வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருந்து, அவர்களுடன் பயணிப்போர் குடிபோதையில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் கண்டிப்பாக அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.