தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
6ம் தேதி வரை இடி-மின்னலுடன் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திகுறிப்பில், 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்து 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கலில் தலா 2 சென்டிமீட்டர் மழையும், திருவண்ணாமலை, நீலகிரியில் தலா 1சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல், தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டி தென்கிழக்கு வங்ககடல், குமரிகடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.