அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
தலையில் கலரிங் செய்து கல்லூரி சென்ற மாணவி.. பெற்றோரை அழைத்து வரச்சொல்லி கண்டித்ததால் விபரீதம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், கடப்பேரி திரு. வி.க நகரில் வசித்து வருபவர் ராகவி (வயது 19). இவர் பல்லாவரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.ஏ 2 இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். இவர் சமீபத்தில் தனது தலைமுடிக்கு அழகு சேர்க்க வர்ணம் பூசியதாக தெரியவருகிறது.
தலைமுடியில் வர்ணம் பூசியத்துடன் கல்லூரிக்கு சென்ற நிலையில், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அதனை கண்டித்துள்ளனர். மேலும், மாணவியின் பெற்றோரரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியுள்ளனர். கல்லூரி வந்த பெற்றோரிடம் தலைமுடியில் வர்ணம் பூசியது தொடர்பாக எடுத்துரைத்து, மகளை கண்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் வீட்டிற்கு சென்ற ரகவியை பெற்றோர்கள் கண்டிக்கவே, மனதுடைந்து காணப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தாம்பரம் காவல் துறையினர், ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.