மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டவர் திட்டமிட்டு படுகொலை; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரௌடி?.. நடந்தது என்ன?..!
சென்னையில் உள்ள திருமங்கலம், பாடிக்குப்பம் காந்திநகர் தெருவில் வசிப்பவர் சிக்கந்தர் (வயது 38). வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து பாடிக்குப்பம் பகுதிக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார். இவர் அப்பகுதியில் மந்திரவாதியாகவும் கவனிக்கப்படும் நிலையில், பலரும் அவரை தேடி வந்து தாயத்து, கயிறு கட்டி சென்றுள்ளனர்.
இவர் தனது வீட்டில் நேற்று இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த திருமங்கலம் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சிக்கந்தரின் உடலை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சிக்கந்தரின் நெருங்கி நண்பர், சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த ரௌடி புருஷோத்தமனுடன் பழகி வந்துள்ளார். இதனால் கஞ்சா போதைக்கு அடிமையாகி ஓரினசேர்க்கை செயலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அவ்வப்போது கஞ்சா போதையில் சிக்கந்தரை பார்க்க வரும் நண்பர் ஓரினசேர்கைக்கு வற்புறுத்தியாக கூறப்படுகிறது.இதற்கு சிக்கந்தர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ரௌடியின் கஞ்சா விற்பனை செய்யும் செயலுக்கு சிக்கந்தரும் எதிர்ப்புடன் செயல்பட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில் தான் சிக்கந்தர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதால், அவர் சிக்கந்தரின் நண்பரால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரௌடி புருசோத்தமனால் கொலை செய்யப்பட்டாரா? என்ற விசாரணை நடந்து வருகிறது.