மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கத்தி முனையில் தாய் - மகளுக்கு நேர்ந்த பயங்கரம்.. சென்னையில் நள்ளிரவில் அதிரவைக்கும் சம்பவம்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, உத்தண்டி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு சாமி, முனுசாமி என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுடன் சுமதியின் தாயான ஜெயம்மாள் தங்கி இருக்கிறார்.
சாமியின் மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சுண்ணாம்புக்குளம் கிராமத்திற்கு பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று, மனைவியை காண சாமி சென்றுள்ளார். வீட்டில் சுமதி, முனுசாமி, ஜெயம்மாள் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.
இவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவில் முகமூடி கும்பல் வீட்டிற்குள் புகுந்து ரூ.1 இலட்சத்து 20 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கை கொள்ளையடித்து சென்றுள்ளது. உறங்கிக்கொண்டு இருந்த சுமதியின் கழுத்தில் கத்தி வைத்து தங்க செயின் பறிக்கும் முயற்சியும் நடந்தது.
சுமதியின் அலறல் சத்தம் கேட்டு முனுசாமி எழுந்த நிலையில், அவரை கொலை செய்திடுவதாக மிரட்டி இருக்கின்றனர். இறுதியில் சுமதி தனது 9 சவரன் செயினை கழற்றி கொடுத்ததும் கொள்ளை கும்பல் தப்பி சென்றுள்ளது. கத்தி முனையில் தாய், மகள், பேரனிடம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக மீஞ்சூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.