மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Couple Goals: மனைவியுடன் டிக்கெட் கவுண்டரில் இரயில்வே பணியாளர் பகீர் செயல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ.!
மனைவியுடன் சேர்ந்து இரயில்வே ஊழியர் டிக்கெட் கவுண்டர் பணத்தை கொள்ளையடுத்துவிட்டு, துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை என நாடகமாடிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவான்மியூர் பறக்கும் இரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில், இரயில்வே பணியாளரை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் ரூ.1.32 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிகாலை 4 மணியளவில் கொள்ளை சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்த நிலையில், கொள்ளை தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில், காவல் துறையினரின் தீவிர விசாரணையில் இரயில்வே டிக்கெட் கவுண்டரில் பணியாற்றி வரும் டிக்கா ராம் என்பவர், தனது மனைவியுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு, துப்பாக்கி முனையில் கொள்ளை என நாடகம் ஆடியது தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர் இரயில்வே பணியாளர் டிக்கா ராமை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவம் நடந்ததும் காவல் துறையினர் டிக்கா ராமை மீட்க சென்ற விடியோவை நேற்றே வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்களால் கட்டிபோடப்பட்ட திருவான்மியூர் ரயில் நிலைய ஊழியரை போலீசார் மீட்கும் வீடியோ காட்சி வெளியீடு!#Train #ViralVideo #Thiruvanmiyur pic.twitter.com/cog9pCa8TA
— Jaya Plus (@jayapluschannel) January 3, 2022