ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
இல்லத்தரசிகளுக்கு இன்பச்செய்தி.. திடீரென குறைந்தது தங்கத்தின் விலை..! உடனே வாங்க அள்ளிட்டு போங்க..!!
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 9-ஆம் தேதி ஒரு பவுன் ரூ.39,000 தாண்டியிருந்தது.
அதன் பின் கடந்த 13-ஆம் தேதி பவுனுக்கு ரூ.39,312-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கடந்த இரு நாட்களாகவே அதே விலையில் நீடித்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.39,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.4876 விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.63,800-ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ரூ.304 குறைந்து, பவுன் ரூ.39008-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 39 ஆயிரத்துக்கு கீழ் விலை குறையுமா? என இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.