மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகமே அதிர்ச்சி.. 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; அண்ணன் முறை உறவினர்கள் வீடுபுகுந்து அதிர்ச்சி செயல்.!
சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வருபவர் 40 வயது நபருக்கு 3 மகள்கள், 1 மகன் என 4 குழந்தைகள் இருக்கின்றனர்.
13 வயதுடைய இரண்டாவது மகள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சோதனை செய்துவிட்டு அவர் 24 வார கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ராயபுரம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமியை அவரின் உறவினர்கள் 3 பேர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் தெரியவந்தது.
சிறுமியின் பெரியம்மா மகன் மனோஜ் (வயது 26), பெரியப்பா மகன் அஜய் (வயது 22) ஆகியோர் கடந்த அக். மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர். அஜய்யின் தம்பி கண்ணாவும் (வயது 21) சிறுமியை அடைய எண்ணி தொந்தரவு செய்து இருக்கிறார்.
இவர்களின் கொடுமை காரணமாக சிறுமி கர்ப்பமான விவகாரமும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளான 3 பேரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மனோஜை கைது செய்தனர். மேஈத்தமுள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.