மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கத்தியை காண்பித்து ஜீன்ஸ், சட்டைகளை திருடி சென்ற கும்பல்.. என்னடா புது ரூட்டா இருக்கு?..!
வண்ணாரப்பேட்டை பகுதியில் ஜவுளி கடையில் 1.75 இலட்சம் மதிப்புள்ள துணிகளை கத்தியை காண்பித்து திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பணியாளராக பிரபு என்பவர் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பிரபு தனது பணிகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், துணிகளை வாங்குவது போல நடித்து, ஊழியர் பிரபுவிடம் கத்தியை காண்பித்து மிரட்டி ரூ.1.75 இலட்சம் மதிப்புள்ள ஜீன்ஸ் பேண்ட், சட்டை உட்பட துணிகளை எடுத்து தப்பை சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக சி.சி.டி.வி கேமிரா ஆதாரத்துடன் பிரபு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் காரனோடை பகுதியை சார்ந்த விக்கி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.