மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூரம்.. பணியிடத்தில் இப்படியுமா மரணம் நிகழணும்?.. 2 குழந்தை, கணவரை தவிக்கவிட்டு சென்ற தாய்.!
இயந்திரத்தில் பெண்ணின் துப்பட்டா சிக்கி மரணமடைந்த சோகம் வண்ணாரப்பேட்டை அருகே நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, மன்னப்பத்தெரு பகுதியை சார்ந்தவர் முகமது அஷ்ரப். இவரது மனைவி அஜ்மா (வயது 38). இவர்கள் இருவருக்கும் மகன், மகள் உள்ளனர். அஜ்மா தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அஜ்மா பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில், பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் இடத்தில் இருக்கும் இயந்திரத்தின் அருகே பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக அஜ்மா அணிந்திருந்த துப்பட்டா அங்குள்ள அரவை இயந்திரத்தில் சிக்கியுள்ளது.
துப்பட்டா மளமளவென இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட நிலையில், அவரின் தலை முடியையும் இயந்திரம் பற்றி இழுத்துள்ளது. இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்கள், விரைந்து செயல்பட்டு இயந்திரத்தை நிறுத்தியுள்ளனர்.
பின்னர், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அஜ்மாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அஜ்மாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காசிமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.