மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேளச்சேரி பகுதியில் உங்க வீடு இருக்குதா?... 100 + பெண்களின் குளியல் வீடியோ... பாத்ரூமில் Spy Camera., 2 இளைஞர்கள் பரபரப்பு வாக்குமூலம்.!
குளியலறையில் இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்த அவலம் நடந்துள்ளது. வீடு வீடாக ரகசிய கேமிரா வைத்து இளைஞர்கள் செய்த பகீர் சம்பவம் வேளச்சேரி பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள வேளச்சேரி நர்மதா தெருவில் வீட்டில் இளம் பெண்கள் தங்கியுள்ளனர். இவர்கள் குளியல் அறை அருகே சம்பவத்தன்று இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள், பெண்கள் தங்கியுள்ள வீட்டில், குளியலறை அருகே உங்களுக்கு என்ன வேலை? என்று கேட்டுள்ளனர்.
இதனால் பதறிப்போன இரண்டு வாலிபர்களும் பதற்றத்துடன் பேச தொடங்கிய நிலையில், சந்தேகமடைந்த பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்குள்ளாக ஒருவர் தனது செல்போனில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கவனித்த மக்கள் இருவரையும் பிடித்து வேளச்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இருவரும் வெங்கடேசன் (வயது 38), ஸ்ரீராம் (வயது 29) என்பது தெரியவந்தது.
இவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் ஒன்றுமே இல்லை. அவர்களின் மீது சந்தேகம் கொண்ட காவல் துறையினர், ரெக்கவரி சாப்ட்வேர் மூலமாக சோதித்தபோது செல்போனில் பெண்கள் குளிக்கும் வீடியோ 100-க்கும் மேற்பட்டவை இருந்தது அம்பலமானது.
இதனை இணையத்தில் விற்பனை செய்யவும், தனிமையில் இருக்கும் போது பார்த்து சுய இன்பம் செய்யவும் வீடியோ எடுத்து வைத்ததாகவும் காவல் துறையினரிடம் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர். மேலும், வேளச்சேரி பகுதியில் உள்ள பல வீடுகளில் ரகசியமாக கேமரா வைத்ததும் அம்பலமாகவே, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.