மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருவிழா விருந்தில் மோதல்... 18 வயது இளைஞன் படுகொலை.! இருவர் கைது.!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
மாவட்டம் முசிறி அருகேவுள்ள சுக்காம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள சோழராஜா பட்டாளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது இந்த திருவிழாவின்போது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் விருந்து வைத்திருக்கிறார்.
இந்த விருதில் கலந்து கொண்ட தீபக் ராஜ்(18), உதயகுமார் மற்றும் உதய் பிரகாஷ் ஆகியோருடைய மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் உதயகுமார் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் தீபக் ராஜை கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக உதயகுமார் மற்றும் உதை பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.