தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முதல்வர் எழுதிய உருக்கமான கடிதம்!!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்களை உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வி துறை எச்சரித்தது.
தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்கள் பரவலாக பணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். போராட்டம் தொடர் வதாக ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ள நிலையில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர் கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு என்றும் புறந்தள்ளியது இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி அரசு ஆணையிட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டாலும் கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டது.
நம் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் தியாக உணர்வோடு, நம் உரிமைகளை விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம் கடமை. தமிழகம் வறட்சியின் பிடியில் உள்ளது. கஜா புயல் பாதிப்புகளில் இருந்து டெல்டா மீண்டு வரவில்லை. விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும். தொழில் முதலீடுகளை பெற்றால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இத்தகைய பொறுப்புகள் இருக்கும் போது, உரிமைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது பொருத்தமாக அமையாது.
அரசு ஊழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் வேண்டுகோள் - 29.01.2019 pic.twitter.com/TnpzYYb2zD
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) January 29, 2019
எனவே, அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு உடனடியாக மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் அர்ப்பணிப்போடு செயல்படுத்த வேண்டும். இதை எனது அன்பான வேண்டுகோளாக கருதி நாளையே (இன்று) பணிக்குத் திரும்ப கேட்டுக் கொள்கிறேன்” என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.