மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டை காலி செய்யுமாறு மிரட்டும் உரிமையாளர்! வாழ வழியின்றி தவித்த மாற்றுத்திறனாளி குடும்பம்! உதவி செய்த ஆட்சியர்!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா காரணமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழ்ந்தவர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் வாடகை வீட்டினை காலி செய்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்களும் இந்த கொரோனா நேரத்தை பொருட்படுத்தாமல் வாடகை கேட்டு தொல்லை செய்வது தான் மிகவும் வருத்தமான விஷயமாக உள்ளது.
இந்தநிலையில், மதுரை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான ராஜா. இவர் மாதம் 5,000 ரூபாய் வாடகையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவிக்கும் இவரால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது வீட்டின் உரிமையாளர், வாடகையை கொடுக்கவில்லை என்றால் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வீட்டின் உரிமையாளரிடம் வடக்கு வட்டாட்சியர் சுரேஷ் தொடர்புகொண்டு பேசி, நோய்களின் தாக்கம் முடிவடையும் வரை வீட்டின் வாடகை கொடுப்பதற்கு அவகாசம் வழங்க அனுமதி பெற்று கொடுத்துள்ளார்.
மேலும், அவருடன் சென்ற வருவாய்த்துறையினர் வீட்டின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமாக அவர்களை வீட்டை காலி செய்ய மாட்டேன் என்பது குறித்து கடிதமும் எழுதி வாங்கியுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் பலர் வாடகை முன்பணம் கழிந்துவிட்டது, இனிமேல் வாடகை கொடுங்கள் இல்லாவிட்டால் வீட்டை காலிசெய்யுங்கள் என வற்புறுத்துவது மனிதத்தன்மையற்ற செயலக உள்ளது. இந்த கொரோனா சமயத்தில் பிறர்க்கு உதவி செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாமல் இருப்போம்.