மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்; சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு.!
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனைப் போன்று தற்போது கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இளநிலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முடித்து அம்மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சென்னை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அனைத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.