தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 68 பேர் பலி!



corona-increased-in-tamilnadu-TF7YF7

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை இல்லாத வகையில், தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,500க்கு கூடுதலாக சென்றுள்ளது. 

corona increased

இதேபோன்று, தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர்.  இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் சென்னையில் 1,939 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்று 51,699 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இதுவரை 776 பேர் உயிரிழந்துள்ளனர்.