மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெத்த மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்!! இரண்டு மகள்களை பெத்த தம்பதியர் தற்கொலை விஷம் குடித்து தற்கொலை..!
பெத்த மகள்கள் இரண்டுபேர் இருந்தும், தங்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லையே என்ற விரக்தியில், வயதான கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து சம்பவம் பெரும் சோகத்தை யார்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (65) மற்றும் பாப்பா (60). இந்த தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கணவருடன் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். வயதான தம்பதியர் அப்பளம் தொழிற்சாலையில் கூலி வேலை செய்துவரும்நிலையில், அதில் கிடைத்த பணத்தை வைத்து இருவரும் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இருவருக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மகள்கள் இருவரும் அவர்களை புறக்கணித்ததாகவும், மருத்துவ உதவிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், மனமுடைந்த தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.