மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குற்றாலத்தில் அரைபோதை ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகளால் விபத்து அச்சம்.. மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் காலமானது தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 20 நாட்களாகவே சுற்றுலா வாகனங்களின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா வாகனங்களை குறிவைத்து அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கடைகள் மேற்படி வாகன நெருக்கடியை அதிகரித்துள்ளன.
சாலை வளைவுகள் மற்றும் விபத்து ஏற்படவுள்ள பகுதிகள் என எங்கும் கடைகள் நிறைந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் அதிகரித்துள்ளது. மதுபோதையில் இருக்கும் நபர்கள் இறுதிக்கட்ட ஷாப்பிங் போன்றவற்றை காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு மேற்கொள்கின்றனர். இதனை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.