மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடுமையிலும் கொடுமை..! தவமாய் தவமிருந்து 10 வருட காத்திருப்பிற்குப் பிறகு பெற்றெடுத்த குழந்தை.. நொடிப் பொழுதில் பலியான அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கரம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர் - ராதிகா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது கௌசிகாவிற்கு இரண்டு வயது ஆகிறது.
இந்நிலையில் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த கௌசிகா எதிர்பாராத விதமாக வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த நீர்த்தேக்க தொட்டியினுள் விழுந்து உள்ளார். இதனையடுத்து வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடியபோது அருகிலிருந்த நீர்த்தேக்க தொட்டியினுள் கௌசிகா விழுந்து கிடப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சடைந்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தை கௌசிகாவை மீட்டு பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் துரதிஷ்டவசமாக குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் பத்து வருட காத்திருப்பிற்கு பிறகு பிறந்த குழந்தை நொடிப்பொழுதில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.