மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்பச்சண்டையில் மனைவி திட்டியதால் ரோசப்பட்ட விவசாயி தற்கொலை; மதுவில் பூச்சி மருந்து கலந்து சோகம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, வெங்கடாம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கும் - மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை நடக்கும்.
இந்த நிலையில், சம்பவத்தன்றும் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் மனைவி கணவர் சீனிவாசனை திட்டி இருக்கிறார்.
ஒருகட்டத்தில் மனதுடைந்துபோன சீனிவாசன், மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.