மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல நாட்களுக்கு பிறகு புதைத்த சடலத்தை தோண்டி வேறு இடத்தில் அடக்கம்! மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையால் பரபரப்பு!
புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, காத்தான் விடுதி கிராமத்தை சேர்ந்த சேர்ந்த பிச்சை என்பவர் கடந்த 8- ஆம் தேதி இறந்தார். இதனையடுத்து அவரது உடலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அடக்கம் செய்யும் சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல், நம்பன்பட்டியை சேர்ந்த சுந்தரம்பாள் என்ற பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்தனர். அப்போது இதனை தடுத்த சுந்தரம்பாளின் மகன் அர்ச்சுணன் என்பவரை இறந்தவரின் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து சுந்தரம்பாளின் உறவினர்கள் மற்றும் நம்பன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காத்தான் விடுதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாசில்தார் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆவணங்களின் அடிப்படையில் பிரச்சினைக்குரிய இடம் சுந்தரம்பாளுக்கு சொந்தமான பட்டா இடம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அடக்கம் செய்யப்பட்ட உடலை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 11 நாட்கள் ஆகியும் உடலை அப்புறப்படுத்தாததை கண்டித்து சுந்தரம்பாளின் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆலங்குயில் இருந்து சம்பட்டி விடுதி செல்லும் சாலையில் உள்ள நம்பன்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து புதைக்கப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அர்ச்சுணனை தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதிஅளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் சுந்தராம்பாளின் நிலத்தில் புதைக்கப்பட்ட சடலம் வட்டாச்சியர் முன்னிலையில் நேற்று (செவ்வாய் கிழமை) தோண்டி எதுத்து மாற்று இடத்தில புதைக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காத்தான்விடுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சடலத்தை மீண்டும் காத்தான்விடுதி சுடுகாட்டில் புதைத்தனர். இதனால், அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.