மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலூரில் பாலம் வழியாக சடலம் இறக்கப்பட்ட சம்பவம் சாதிப் பாகுபாடே இல்லை! தமிழக அரசு விளக்கம்!
வேலூரை சேர்ந்த நபர் ஒருவர் இறந்த நிலையில் அவருக்கு இறுதி சடங்குகள் செய்து, அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மயானத்திற்குள் நுழையும் வழி மற்றொரு சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பண்ணை நிலம் வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதி மருத்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இறந்தவரின் உடலை சுமந்து வந்த உறவினர்கள், ஒரு பாலத்தின் மேலிருந்து பாடையில் கயிறு கட்டி கீழே இறங்கியுள்ளனர். மேலும் கீழே நின்றுகொண்டிருந்த நபர்கள் சிலர் பாடையை பிடித்து பின்னர் சுமந்து செல்கின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உதவி சொலிசிட்டரின் முறையீட்டை ஏற்று, உயர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
Shocking, painful and disheartening..
— Pramod Madhav (@madhavpramod1) August 22, 2019
Vellore - Body lowered by ropes from a bridge after access to graveyard denied to Dalits..
Entry points were encroached by Caste Hindus who refused to give way through a farm land for a dead body.. pic.twitter.com/Kw0EmEUJHg
விசாரணையில், வேலூர் நாராயணபுரம் கிராமத்தில் சாதி பாகுபாடு ஏதும் இல்லை எனவும், மயானத்திற்கு செல்லும் பாதை பட்டா நிலம் எனவும், அதன் உரிமையாளர்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் அனுமதி கொடுத்திருப்பார்கள் என்றும், மயானத்திற்கு செல்ல எவரும் அனுமதி மறுக்கவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏன் சடலத்தை பாலத்தில் இருந்து தொட்டில் கட்டி இறக்கி கொண்டு செல்லப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.