மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே உஷார்.! தொண்டையில் மிட்டாய் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி.!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயிருக்கின்ற சரத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் (24), மலர்நிஹா(21) என்ற தம்பதிகளுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.
ஆனால், ஒரு வருடத்திற்கு முன்னர் மலர்நிஹாவின் கணவர் ஞானசேகர் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய தாயோடு வளர்ந்து வந்த குழந்தை ஹர்ஷனுக்கு நேற்று மாலை தாய் மலர்நிஹா ஜெல்லி மிட்டாய் வாங்கி கொடுத்தார். குழந்தை ஹர்ஷன் அதனை விழுங்க முயற்சித்தபோது, திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் உண்டாகியிருக்கிறது. பின்னர் இதைக் கண்டு பதற்றமான மலர்நிஹா உடனடியாக குழந்தை ஹர்ஷனை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கே குழந்தை ஹர்ஷனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறினர். இதன்பின் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதன் மூலமாக ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு, உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால், உணவுக் குழாயில் அந்த ஜெல்லி மிட்டாய் சிக்கிக் கொண்டு, குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக, குழந்தை உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.