மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பா? அதை நம்பிடாதீங்க - மருத்துவக்கல்லூரி டீன் மறுப்பு..!
பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்த நிலையில், ஒருவர் மட்டுமே இருந்துள்ளதாக டீன் விளக்கம் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் பாம்பு கடித்து 5 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 5 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக செய்தி வெளியாகிய நிலையில், இதுகுறித்து மருத்துவமனை டீன் ஜோசப்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகவும், "பாம்பு கடிக்கான அனைத்து மருந்துகளும் மருத்துவமனையில் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் இறப்பு விகிதத்தை முழுமையாக குறைக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.