8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
தீபாவளிக்காக சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மிக்ஸர்.. பகீர் வீடியோ வைரல்.!
காரப்பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யும் கடையில், பணியாளர்கள் சுகாதாரமற்ற முறையில் மிக்ஸர் தயாரிக்கும் வீடியோ வைரலாகியுளளது.
தீபஒளி பண்டிகை என்றாலே இனிப்பு & பலகார கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு பஞ்சம் இருக்காது. அவை தவிர்த்து நமது வீடுகளிலும் தங்களால் இயன்ற நொறுக்குத்தீனிகளை செய்து உற்றார்-உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து தீபஒளி பண்டிகை சிறப்பிக்கப்பட்டும்.
இந்த நிலையில், உணவுப்பொருட்கள் விஷயத்தில் பல கவனகுறைவு மற்றும் அலட்சியத்தால் அதன் தரம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. அதனைப்போல, பண்டிகை நாட்களில் ஸ்வீட் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பதால், பணியாளர்கள் அதனை அவசர கதியில் தயாரிப்பார்கள்.
அவசர கதியை கதியை மனதில் வைத்து செயல்படும் பலரும், அதனை முறையாக தயாரிப்பதை விரும்புவது இல்லை. அப்படியொரு நிகழ்வுதான் இங்கு நடந்துள்ளது. மிக்ஸர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், காலில் வெறுமனே பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு வெறும் கையால் அதனை பிரித்து எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.