மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபஒளி திருநாளில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு எப்படி?.. அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை.!
தீபஒளி பண்டிகை நாளில் பட்டாசுகள் வெடிப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, அந்த நேரத்திற்குள் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும், பசுமை பட்டாசுகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் கூறப்படுகின்றன.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காலை 6 மணிமுதல் 7 மணிவரையிலும், இரவில் 7 மணிமுதல் 8 மணிவரையிலும் என 2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான தீப ஒளித்திருநாள் அக் மாதம் 24-ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள நிலையில், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு, சீன பட்டாசு விற்பனையை தடுப்பது, பசுமை பட்டாசுக்கான முக்கியத்துவம் குறித்து 28ம் தேதி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய்த்துறை அமைச்சர், தொழிலாளர்துறை அமைச்சர், வனத்துறை & சுற்றுசூழல் அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் தமிழ்நாடு பட்டாசு விற்பனை சங்க பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளார்கள்.