மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Breaking#: தமிழ்நாட்டில் எங்கெங்கு எதற்கு அனுமதி.. தமிழக முதல்வர் வெளியிட்ட புதிய பட்டியலின் முழுவிவரங்கள்!
கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 அன்று நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின் படி, எந்த விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, (Except Containment Zones) பிற பகுதிகளில் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது எந்தெந்த பகுதிகளில் எவை எவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்ற விவரங்களையும் தற்போது தனது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன் முழு தொகுப்புகள் பின்வருமாறு:
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின்வணிக நிறுவனங்கள் (e-Commerce) ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
உணவகங்களில் காலை 6மணி முதல் இரவு 9 வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், மதுக்கூடங்கள், கேளிக்கை கூடங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடர்கிறது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து ஆகியவற்றுக்கும் தடை நீட்டிக்கப்படுகிறது. #LockdownExtended pic.twitter.com/r3Go8dUy5X
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகள் படி, எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. pic.twitter.com/irkkjwXso1
SEZ, EOU & Export Units நிறுவனங்கள்:
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப 25% பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும்.
நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
முடி திருத்தகங்கள்/ அழகுநிலையங்கள் தவிர, ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் மொபைல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை, பழுதுநீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 11மணி முதல் மாலை 5 வரை செயல்படலாம்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் /சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர். #LockdownExtended
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர Except Containment Zones) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. #LockdownExtended #TNGovt pic.twitter.com/bS10n65lfh
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பின் படி, நோய் தடுப்பு பகுதிகளில் எந்த தளர்வும் வழங்கப்படவில்லை.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 2, 2020
நோய் தொற்றின் அளவு, தன்மை அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பகுதிகளில், மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டே சில தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/GnmPh42Oe0