மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சரக்கு கேட்டு நண்பனுக்கு கத்திக்குத்து: தர்மபுரியில் பரபரப்பு சம்பவம்.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் சத்தியமூர்த்தி. சம்பவத்தன்று சத்தியமூர்த்தி, நண்பர்கள் செல்வம், விக்னேஷ், குமார், சேகர் அண்ணா நகர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கின்றனர்.
அச்சமயம் மதுபானம் காலியாகியதால் அனைவருக்கும் போதவில்லை என்று கூறப்படுகிறது. மதுபானம் வாங்கித்தருமாறு செல்வம் சத்தியமூர்த்தியிடம் கேட்கவே, அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.