மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கள்ளக்காதலி நீ தான் வேணும்" - அடம்பிடித்த நபரின் பதறவைக்கும் செயல்.!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, கொண்டையன அள்ளி பகுதியில் வசித்து வருபவர் இன்பசேகரன் (வயது 55). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை.
இதே பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடி பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பெண்மணி இன்பசேகரோடு பேசாமல் இருந்துள்ளார். பெண்ணை தன்னுடன் பேசக்கூறி இன்பசேகர் வற்புறுத்தியும் பலன் இல்லை. இதில் ஆத்திரமடைந்தவர், தனிமையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இன்பசேகரனை கைது செய்தனர். அவரின் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டுள்ளது.