மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்து 15 நாட்கள் ஆகும் குழந்தைக்கு மதுவை ஊற்றிவிட்ட பெண் : குடிபோதையில் நடந்த பயங்கரம்.! உயிர்காத்த காவலர்கள்.!!
பச்சிளம் குழந்தைக்கு பெண்மணி மதுபோதையில் மதுவை ஊற்றிவிட்ட பயங்கரம் நடந்துள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிறுத்தத்தில், மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயதுடைய பெண்மணி, பிறந்து 1 மாதமாகும் ஆண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு மதுபானத்தை ஊற்றிக்கொண்டு இருந்தார். மேலும், தானும் மதுவை குடித்துவிட்டு குழந்தையை அடித்தார்.
இதனைக்கண்ட பேருந்து நிலைய வியாபாரிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணிடம் விசாரித்தபோது, குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆவது தெரியவந்தது.
இதனையடுத்து, குழந்தையை மீட்ட அதிகாரிகள் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மேற்படி பெண்மணி போதையில் இருந்ததால் சரிவர பதில் தெரியவில்லை. இதனால் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணைக்கு பின்னரே குழந்தை யாருடையது என்பது தெரியவரும்.