மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல், திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த காமுக வாத்தி..!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, அமரபூண்டி அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில், தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் நாட்ராயன் (வயது 30). இவரது சொந்த ஊர் நந்தவனப்பட்டி ஆகும்.
நாட்ராயனுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இவர் பணியாற்றி வந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவி பயின்று வந்துள்ளார். இவருக்கு நாட்ராயன் கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும், சிறுமியிடம் ஆசையாக பேசி, தனக்கு திருமணம் நடந்துள்ளதை மறைந்து, உன்னை திருமணம் செய்கிறேன் என ஆசை காண்பித்து வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஒரு சமயத்தில், நாட்ராயனின் நடத்தையில் சந்தேகமடைந்த மாணவி விஷயத்தை, பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாட்ராயனை கைது செய்தனர். இவர் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.