மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளிக்கு குடிமகன்கள் செய்த சாதனை.! முதலிடத்தை பிடித்த மாவட்டம்.!
தமிழகத்தில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் பல கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த டாஸ்மாக் வருமானம் தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருவாயாக கருதப்படுகிறது. மேலும் தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்த டாஸ்மாக் நிறுவனங்கள் தான் திகழ்கின்றன என்று சொன்னால், அது மிகையாகாது.
இந்த நிலையில், நேற்றைய தினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தை முன்னிட்டு, தமிழக டாஸ்மாக் கடைகளில், மது விற்பனை சென்ற வருடத்தை விட இந்த வருடம் 3 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது.
கடந்த 11ஆம் தேதி தமிழக டாஸ்மாக் கடைகளில், 221 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. அதேபோல தீபாவளி தினமான நேற்று, 246 கோடி ரூபாய் வரையில், வர்த்தகமாகியிருக்கிறது. இந்த 2 நாட்களில், ஒட்டுமொத்த டாஸ்மாக் வருமானம் 467.69 கோடி என கூறப்படுகிறது.
கடந்த 11ஆம் தேதி திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அதிக மது விற்பனை நடைபெற்றுள்ளது. தலைநகர் சென்னையில், 100 கோடி ரூபாயளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் 100 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 96 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியிருக்கிறது.