மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இஸ்லாமியர்களுக்கு ஒரு இன்னல் என்றால் முன்னால் நின்று போராடுவேன்!! நெஞ்சை தொட்ட கதிர் ஆனந்த்..
இசுலாமிய சகோதரர்களுக்கு ஒரு இன்னல் என்றால் எப்போதும் முன்னால் நின்று போராடுபவன் என கூறியுள்ளார் திமுக வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள்.
இந்தியா முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டிவருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களைவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளநிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திமுக கட்சி சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் அவர்கள், தினம் தினம் தனது வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக்கூறி மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து வருகிறார்.
கடந்த முறை மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற கதிர் ஆனந்த் அவர்கள் வேலூர் தொகுதியில் சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை, கே.வி குப்பம் சுங்கச்சாவடி அகற்றல், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அமைத்துக்கொடுத்ததற்கான பணியை தொடங்கி வைத்தல், மக்களுக்கான மருத்துவ முகாம்கள், அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வுகள் என பல்வேறு பணிகளை செய்துகொடுத்ததை அடுத்து அவருக்கு தற்போதும் அந்த பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இதனால் இந்தமுறையும் அவரே வேலூர் தொகுதியில் வெற்றிபெறுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் எரிகுத்தி, கொத்தப்பள்ளி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த் அவர்கள், அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய வேட்பாளர்களை கவரும் வகையில் தனது வாக்குறுதிகளை எடுத்துக்கூறினார். "இசுலாமிய சகோதரர்களுக்கு ஒரு இன்னல் என்றால் எப்போதும் முன்னால் நின்று போராடுபவன் நான் எனவும், CAA சட்டத்தை ஒழித்து சகோதரத்துவம் தழைத்திட இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர் எனவும் கதிர் ஆனந்த் கேட்டுக்கொண்டார்.
இசுலாமிய சகோதரர்களுக்கு ஒரு இன்னல் என்றால் எப்போதும் முன்னால் நின்று போராடுபவன் நான்!! CAA சட்டத்தை ஒழித்து சகோதரத்துவம் தழைத்திட இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பீர்.
— KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் (@dmkathiranand) April 6, 2024
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore… pic.twitter.com/cqAd7b7Hzp