மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகையைப் பற்றி ஆபாச பேச்சு... சிக்கலில் திமுக பேச்சாளர்... மூன்று பிரிவுகளில் வழக்கு.!
அதிமுக பிரமுகரும் நடிகையுமான விந்தியாவை பற்றி பேசியதால் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சங்கமம் படத்தின் மூலம் பிரபலமானவர் விந்தியா. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் விந்தியாவைப் பற்றி திமுகவின் பேச்சாளர் குடியாத்தம் குமரன் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குடியாத்தம் குமரன் விந்தியாவைப் பற்றி ஆபாசமாக பேசியதாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் சைபர் கிரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சைபர் க்ரைம் காவல்துறை குடியாத்தம் குமரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.