மது அருந்துபவனுக்கு மணமுடிக்காதீர்கள்! சிறுமியின் அதிரடி! குவிந்துவரும் பாராட்டு!



dont marriage for drinking habit man

தற்போதைய வாழ்க்கை முறையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இளைஞர்கள் சிறுவயதிலேயே இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டு வருகின்றனர். பள்ளியில் படிக்கும் சில மாணவர்களும் இதனை கற்றுக்கொண்டு வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

 தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக பெண்களும், பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மதுக் கடையை அரசாங்கமே நடத்தி வருகிறது. இன்றைய தலைமுறை ஆண்கள் மட்டுமின்றி சில பெண்களும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

drinking alcohol

தற்போது உயிரிழப்பவர்களில் மது அருந்தி இறப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். இந்த மதுப்பழக்கத்தினால் தமிழகத்தில் நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளமாக உள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உயிரிழந்தவர்களின் குழந்தைகள் ஏராளமானோர் தமிழகத்தில் தத்தளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிறுமி ஒருவர், "மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்காதீர்கள்" என எழுதிய பதாகையை சாலையில் எடுத்துச்செல்லும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுமியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.