மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனை தோண்ட தோண்ட தோண்ட பெண்களின் ஆபாச புகைப்படங்கள்.. ஓட்டுநர் கைது.!
1000க்கும் மேற்பட்ட பெண்களை தவறாக படம் பிடித்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 48). ஓட்டுனரான இவர் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்த சென்ற பெண்ணைத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனைக் கண்ட அந்த பெண்ணின் கணவன் ஜெயச்சந்திரனை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவர் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஜெயச்சந்திரனின் செல்போனை வாங்கி போலீசார் விசாரணை நடத்தியது பெண்கள் பள்ளி மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தன. மேலும் சில பெண்களை ஆபாச ரீதியாகவும் புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயச்சந்திரன் கைது செய்தனர். எதற்காக போட்டோ எடுத்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.