ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிமுறை.! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் 8 போட தேவையில்லை.!



driving licence new rule

அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயிற்சி முடித்து சான்று பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

திறன் வாய்ந்த ஓட்டுனர்கள் பற்றாக்குறை மற்றும் சாலை விதிகள் பற்றிய புரிதல் இல்லாமல் அதிகரிக்கும் விபத்துகள் போன்றவை இந்திய சாலை போக்குவரத்து துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்தநிலையில், திறமையான ஓட்டுனர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை உருவாக்க சாலைபோக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் பயிற்சி மையங்களில் உயர்தர பயிற்சியை உறுதி செய்வதற்காக மாதிரிகள் (சிமுலேட்டர்கள்), பிரத்யேக ஓட்டுனர் பயிற்சி தடங்கள் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி மாற்று மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் இந்த மையங்களில் கற்றுக்கொடுக்கப்படும்.

driving licence

இந்த பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க தேவையில்லை. இதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெரும் வழிமுறைகள் எளிதாகும். இந்த மையங்கள் தொழில் சார்ந்த சிறப்பு பயிற்சியையும் வழங்க அனுமதிக்கப்படும்.

இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே அந்த ஓட்டுநருக்கு உரிமம் கிடைத்துவிடும்.