மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட பாவி மனுசனுகளா..! போதைக்காக இப்படியா செய்வது.? கடைசியில் உயிரே போயிருச்சே..!
கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுபிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை ஒரகடம் அருகே உள்ள குன்னவாக்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களான சங்கர், கிருஷ்ணா, சிவசங்கர் ஆகிய மூன்று பேரும் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள நிலையில், போதைக்காக வார்னீசுடன் கலக்கும் திரவமான தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சங்கர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவசங்கர் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.