மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பர்களுடன் மது போதையில் குளத்தில் இறங்கிய இளைஞர்! போதை அதிகமானதால் நேர்ந்த சோகம்!
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மாகாளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் எலக்ட்ரிகல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து அவர்கள் ஊரில் உள்ள தெப்பக்குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
தினேஷிற்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மதிய நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு தனது நண்பர்களுடன் அங்குள்ள தெப்பக்குளத்தில் குளித்துள்ளார்.
நேற்று தினேஷ் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். இந்தநிலையில் அதிக போதையில் குளத்தில் இறங்கி குளித்தபோது, தினேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தெப்பக்குளத்தில் தினேஷின் உடலை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் தினேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.