மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபோதையில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.!
தனியாக சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய மது போதை போலீசாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மெடிக்கல் கடையில் 22 வயதான இளம் பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒத்தக்கடை என்ற இடத்தில் காவல்துறை சோதனை சாவடியை கடந்து சென்றபோது, சோதனை சாவடியில் மது போதையில் இருந்த 40 வயது போலீசார் ஒருவர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அதன்படி திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இளம் பெண்ணின் வாகனத்தை மறித்து அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண் கத்தி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் மது போதையில் இருந்த போலீஸ்காரரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மது போதை போலீஸ்காரரை மீட்டு இளம் பெண்ணை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் மது போதை போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பிக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.