மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துரைமுருகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி! கவலையில் மூழ்கிய திமுக தொண்டர்கள்!
திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு முக ஸ்டாலினுக்கு உறுதுணையாக கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து வருகிறார் திமுக பொருளாளர் துரைமுருகன். அவருக்கு இன்று அதிகாலையில் காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி #DuraiMurugan #DMK #ApolloHospital pic.twitter.com/AFcYsKXJoh
— Sun News (@sunnewstamil) 19 June 2019
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு கடந்தமாதம் சிறுநீரகத் தோற்று ஏற்பட்டு காய்ச்சல் காரணமாக இதே அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.