முட்டை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; அதிரடியாக குறைந்தது முட்டை விலை.!



Egg Price Low 

 

நாமக்கல்லில் உள்ள முட்டை மற்றும் கறிக்கோழி பண்ணைகள் மூலமாக உலகெங்கும் முட்டை, கறிக்கோழி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. 

இதன் விலை தமிழ்நாடு முட்டை கொள்முதல் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில், முட்டை கொள்முதல் விலையானது கடந்த சில மாதமாகவே உச்சத்தில் இருந்தது. 

namakkal

பண்ணையில் முட்டதை சில்லறை விலைக்கு ரூ.5.50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் முட்டை விலை ரூ.7 வரை உயர்ந்தது. 

இதனால் முட்டை பிரியர்கள் பெரும் வேதனையடைந்தனர். இந்நிலையில், தற்போது முட்டை கொள்முதல் விலை ரூ.4 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முட்டை விலை சில்லறை விற்பனையில் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது.